×
النحلவசனம் 66

அல்-முக்தஸர்

وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَـٰمِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشَّـٰرِبِينَ ﴿٦٦﴾

மக்களே!- உங்களுக்கு ஆடு, மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளில், படிப்பினை பெறுபவர்களுக்கு, படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் உடம்பிலுள்ள இரத்தத்திற்கும் மத்தியிலிருந்து வெளியேறும் பாலை அதன் மடியினூடாக நாம் உங்களுக்குப் புகட்டுகின்றோம். அவ்வாறிருந்தும் அருந்துவோருக்கு நல்ல, சுவையான, தூய்மையான சுத்தமான பாலாக வெளிவருகின்றது.