×
النحلவசனம் 67

அல்-முக்தஸர்

وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَـٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿٦٧﴾

நாம் உங்களுக்கு உணவாக வழங்கும் பேரீச்சம் பழம் மற்றும் திராட்சை பழங்களிலும் உங்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. நீங்கள் அவற்றிலிருந்து அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருளையும் பெறுகிறீர்கள். அது நல்லதல்ல. மேலும் அதிலிருந்து பேரீத்தம் பழம், காய்ந்த முந்திரி, வினாக்கிரி, பேரீத்தம்பானி போன்ற உங்களுக்குப் பயனுள்ள நல்ல ஆகாரத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள். நிச்சயமாக இதில் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் அடியார்களுக்குப் புரிந்த அருட்கொடைகளையும் அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறுவார்கள்.