அல்-முக்தஸர்
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلْأَنْعَـٰمِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَآ أَثَـٰثًا وَمَتَـٰعًا إِلَىٰ حِينٍ ﴿٨٠﴾
அல்லாஹ் நீங்கள் கற்களினாலும் ஏனையவற்றாலும் நிர்மாணிக்கும் உங்கள் வீடுகளில் தங்குமிடத்தையும் ஓய்வையும் வைத்துள்ளான். நகரப் புறத்தில் வீடுகள் அமைப்பதைப் போன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் தோல்களினால் கிராமப் புறங்களில் கூடாரங்களை அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கிச் செல்வதும் இறங்குமிடத்தில் அதனை கூடாரமாக அமைப்பதும் உங்களுக்கு இலகுவாக உள்ளது. செம்மறியாட்டின் தோல்கள், ஒட்டகம் மற்றும் வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து வீட்டிற்குத் தேவையான தளபாடங்களையும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அனுபவிக்கும் ஆடைகளையும் போர்வைகளையும்அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்.