அல்-முக்தஸர்
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَـٰلًا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَـٰنًا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ ﴿٨١﴾
வெயிலிலிருந்து நீங்கள் நிழல் பெறும் மரங்கள் மற்றும் கட்டடங்களையும் மலைகளிலிருந்து குகைகளையும் தங்குமிடங்களையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அவற்றின்மூலம் குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்; எதிரிகளை விட்டும் மறைந்து கொள்கிறீர்கள். உங்களுக்காக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் பருத்தி மற்றும் ஏனையவற்றினாலான ஆடைகளையும் யுத்தத்தில் ஆயுதம் உங்கள் உடம்புகளைப் பாதிக்காவண்ணம் உங்களைக் காக்கும் போர்க் கவசங்களையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிபணிந்து அவனுக்கு இணையாக எதனையும் ஆக்காமல் இருக்கும் பொருட்டு அவன் முந்தைய அருட்கொடைகளை உங்கள் மீது பொழிந்தது போன்று தன் அருட்கொடைகளை உங்கள் மீது முழுமைப்படுத்துகிறான்.