அல்-முக்தஸர்
قُلْ ءَامِنُوا۟ بِهِۦٓ أَوْ لَا تُؤْمِنُوٓا۟ ۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ مِن قَبْلِهِۦٓ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا ﴿١٠٧﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் அவனை நம்பிக்கைகொள்ளுங்கள். உங்களின் நம்பிக்கையினால் அவனுக்கு எதுவும் அதிகமாகிவிடப்போவதில்லை. அல்லது நம்பிக்கைகொள்ளாமல் இருங்கள். உங்கள் நிராகரிப்பினால் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. முந்தைய இறைவேதங்களைப் படித்தவர்களும் வஹியையும் தூதுத்துவத்தையும் அறிந்தவர்களும் அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் நன்றிசெலுத்தும் விதமாக அல்லாஹ்வுக்கு சிரம்பணிகிறார்கள்.