அல்-முக்தஸர்
وَيَقُولُونَ سُبْحَـٰنَ رَبِّنَآ إِن كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا ﴿١٠٨﴾
தங்களின் சிரம்பணிதலில், “எங்கள் இறைவன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதைவிட்டும் தூய்மையானவன். முஹம்மதை தூதராக அனுப்புவேன் என்று அவன் வாக்களித்தது நிறைவேறி விட்டது. நிச்சயமாக எங்கள் இறைவனின் இந்த வாக்குறுதியும் ஏனைய வாக்குறுதிகளும் சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்” என்று கூறுகிறார்கள்.