×
الإسراءவசனம் 11

அல்-முக்தஸர்

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًا ﴿١١﴾

மனிதன் நன்மையைத் தேடி பிரார்த்தனை செய்வதுபோல அறியாமையினால் கோபத்தில் தனக்கெதிராக, தன் பிள்ளைகளுக்கும் செல்வங்களுக்கும் எதிராக கெடுதியைக்கொண்டு பிரார்த்தனை செய்கிறான். நாம் அவனுடைய பிரார்த்தனைக்கு பதிலளித்தால் அவன் அழிந்து விடுவான்; அவனுடைய பிள்ளைகளும் செல்வங்களும் அழிந்து விடும். மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். நிச்சயமாக தனக்கு தீங்கு தரக்கூடியதற்கு அவசரப்படுகிறான்.