×
الإسراءவசனம் 12

அல்-முக்தஸர்

وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنَـٰهُ تَفْصِيلًا ﴿١٢﴾

நாம் இரவையும் பகலையும், அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய இரு சான்றுகளாகப் படைத்துள்ளோம். ஏனெனில் அவற்றில் நீளமும் சுருக்கமும் வெப்பமும் குளிரும் மாறிமாறி வருகின்றன. மக்கள் ஓய்வெடுப்பதற்காகவும் உறங்குவதற்காகவும் இரவை இருட்டாகவும் அவர்கள் பார்ப்பதற்காக, தனது அருளினால் உங்களுக்காக நிர்ணயம் செய்த வாழ்வாதாரத்தை நீங்கள் தேடிப்பெற்றுக்கொள்வதற்காக பகலைப் பிரகாசமானதாகவும் அமைத்துள்ளோம். இன்னும் அந்த இரண்டும் மாறிமாறி வருவதைக்கொண்டு நீங்கள் வருடங்களின் எண்ணிக்கையையும் உங்களுக்கு தேவையான மாதங்கள், நாட்கள் மற்றும் நேரங்களை கணக்கிட்டு அறிந்துகொள்வதற்காகத்தான். விடயங்களைப் பிரிந்து விளங்கவும் அசத்தியவாதி யார் சத்தியவாதி யார் என்பது தெளிவாகவும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து விட்டோம்.