×
الإسراءவசனம் 110

அல்-முக்தஸர்

قُلِ ٱدْعُوا۟ ٱللَّهَ أَوِ ٱدْعُوا۟ ٱلرَّحْمَـٰنَ ۖ أَيًّا مَّا تَدْعُوا۟ فَلَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَٱبْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا ﴿١١٠﴾

தூதரே!- “அல்லாஹ்வே, ரஹ்மானே” என்று நீர் பிரார்த்தனை செய்வதை எதிர்ப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ், ரஹ்மான் இரண்டும் அவனுடைய பெயர்கள்தாம். அவையிரண்டில் எதைக்கொண்டும் அல்லது அவனுடைய மற்ற பெயர்களைக் கொண்டும் அவனை அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் அவனுடைய பெயர்களில் உள்ளவைதாம். நீங்கள் அவற்றைக் கொண்டோ மற்ற அவனுடைய அழகிய பெயர்களைக்கொண்டோ அவனை அழையுங்கள். நீர் இணைவைப்பாளர்கள் கேட்குமளவுக்கு தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர். நம்பிக்கையாளர்கள் செவியுறாதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக.