×
الإسراءவசனம் 111

அல்-முக்தஸர்

وَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌ فِى ٱلْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُۥ وَلِىٌّ مِّنَ ٱلذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًۢا ﴿١١١﴾

தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். புகழின் அனைத்து வகைகளுக்கும் அவன் தகுதியானவன். அவன் மகனையோ, இணையையோ விட்டும் தூய்மையானவன். அவனது ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. அவனுக்கு இழிவு ஏற்படாது. யாருடைய உதவியும் அவனுக்குத் தேவைப்படாது. அவனை அதிகமாக மகத்துவப்படுத்துங்கள். அவனுக்கு மகனையோ ஆட்சியில் பங்காளியையோ உதவியாளனையோ ஏற்படுத்தி விடாதீர்கள்.