×
الإسراءவசனம் 33

அல்-முக்தஸர்

وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِۦ سُلْطَـٰنًا فَلَا يُسْرِف فِّى ٱلْقَتْلِ ۖ إِنَّهُۥ كَانَ مَنصُورًا ﴿٣٣﴾

நம்பிக்கை அல்லது அபயமளித்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பாதுகாத்த எந்த உயிரையும் கொன்றுவிடாதீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல், மணமான பிறகு விபச்சாரம் செய்தல், கொலைக் குற்றம் ஆகியவற்றினால் கொல்லப்படத் தகுதியானவர்களைத் தவிர. எவர் காரணமின்றி அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டாரோ அவருடைய வாரிசுகளுக்கு நாம் கொலையாளி மீது அதிகாரம் அளித்துள்ளோம். அவர்களுக்குப் பழிவாங்கும் உரிமையும், ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அல்லது எதனையும் பெறாமலும் மன்னிக்கும் உரிமையும் உண்டு. கொலையாளியைச் சித்திரவதை செய்தல் அல்லது அவர் கொல்லாத ஒரு ஆயுதத்தால் கொலை செய்வது அல்லது கொலை செய்யாதவனைக் கொல்லுதல் போன்றவற்றைச் செய்து அல்லாஹ் அனுமதித்த எல்லையை மீறிவிட வேண்டாம். நிச்சயமாக அவர் உதவிசெய்யப்படுவார்.