அல்-முக்தஸர்
وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۚ وَأَوْفُوا۟ بِٱلْعَهْدِ ۖ إِنَّ ٱلْعَهْدَ كَانَ مَسْـُٔولًا ﴿٣٤﴾
தந்தையை இழந்த குழந்தைகளின் சிந்தனையாற்றலும் பக்குவமும் முழுமையடையும் வரை அவர்களின் செல்வத்தை அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அதனை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வழிகளிலே அன்றி பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையும் உங்களுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையை முறிக்காமல், குறைவின்றி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி வழங்கியவரிடம் அதனை நிறைவேற்றினாயா அல்லது நிறைவேற்றவில்லையா ? என மறுமை நாளில் விசாரிப்பான். அவற்றை நிறைவேற்றியவர்களுக்கு அவன் நற்கூலி வழங்குவான். அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனை வழங்குவான்.