×
الإسراءவசனம் 7

அல்-முக்தஸர்

إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْـَٔاخِرَةِ لِيَسُـۥٓـُٔوا۟ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا۟ ٱلْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا۟ مَا عَلَوْا۟ تَتْبِيرًا ﴿٧﴾

இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் நன்மையான செயல்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றினால் அவற்றால் ஏற்படும் பலன் உங்களுக்குத்தான். உங்களின் செயல்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். நீங்கள் தீய செயல்களைச் செய்தால் அவற்றால் ஏற்படும் விளைவு உங்களைத்தான் பாதிக்கும். உங்களின் நற்செயல்கள் அவனுக்குப் பயனளிப்பதுமில்லை; உங்களின் தீய செயல்கள் அவனைப் பாதிப்பதுமில்லை. இரண்டாவது குழப்பம் நிகழ்ந்தால் உங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பல்வேறு இழிவுகளை அவர்கள் உங்களை அனுபவிக்கச் செய்து அவமானத்தை உங்கள் முகங்களில் வெளிப்படையாகத் தெரியச் செய்யவும் அவர்கள் முதன் முதலில் பைத்துல் முகத்தஸில் நுழைந்தவாறு மீண்டும் நுழைந்து அதனை நாசம் செய்யவும் அவர்களால் தாம் வெற்றிகொண்ட இடங்களையெல்லாம் அடியோடு அழித்துவிடவும் உங்களின் எதிரிகளை உங்கள் மீது சாட்டிவிடுவோம்.