×
الإسراءவசனம் 8

அல்-முக்தஸர்

عَسَىٰ رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَـٰفِرِينَ حَصِيرًا ﴿٨﴾

இஸ்ராயீலின் மக்களே!- இவ்வளவு கடுமையான தண்டனைக்குப் பிறகும் நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பி உங்களின் செயல்களைச் சீர்படுத்திக் கொண்டால் அவன் உங்கள் மீது கருணை காட்டலாம். நீங்கள் மூன்றாவது முறையும் அல்லது அதற்குப் பிறகும் குழப்பத்தில் ஈடுபட்டால் நாம் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக (தங்கும் இடமாக) ஆக்கியுள்ளோம். அவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.