அல்-முக்தஸர்
وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأْوُۥٓا۟ إِلَى ٱلْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِۦ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا ﴿١٦﴾
நீங்கள் உங்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கி, அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் தெய்வங்களை விட்டு விட்டு அவனை மட்டுமே வணங்கிய போது உங்கள் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த குகையில் சென்று தஞ்சமடையுங்கள். உங்கள் இறைவன் தன் அருளினால் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வான். உங்களின் சமூகத்தினரிடையே வாழ்ந்த வாழ்க்கைக்குப் பகரமாக உங்களுக்குப் பயனுள்ளவாறு உங்கள் காரியங்களை எளிதாக்கித் தருவான்.