×
الكهفவசனம் 17

அல்-முக்தஸர்

وَتَرَى ٱلشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ ٱلْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمْ فِى فَجْوَةٍ مِّنْهُ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَـٰتِ ٱللَّهِ ۗ مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيًّا مُّرْشِدًا ﴿١٧﴾

அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செயல்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களை தூங்க வைத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். -அவர்களை பார்க்கக்கூடியவரே!- சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அது அவர்களின் குகையைவிட்டு அதிலே நுழைபவருக்கு வலப்பக்கமாகச் சாய்வதையும் அது மறையும்போது அவர்கள் மீது விழாமல் இடப்பக்கமாகச் சாய்வதையும் காண்பீர். அவர்கள் நிரந்தர நிழலில் இருந்தார்கள். சூரிய வெப்பம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் குகையில் அவர்களுக்குத் தேவையான காற்றுக் கிடைக்குமளவு விசாலமான இடத்தில் இருந்தார்கள். குகையில் அவர்கள் தஞ்சமடைந்தது, அங்கு அவர்கள் மீது தூக்கம் சாட்டப்பட்டது, சூரியன் அவர்கள் மீது விழாமல் இருந்தது, விசாலமான இடத்தைப் பெற்றது, தங்கள் சமூகத்தவரிடமிருந்து தப்பித்தது ஆகியவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆச்சரியமான சான்றுகளாகும். அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவராவார். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேரான வழியைக்காட்டும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். ஏனெனில் நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது வேறு எவரிடத்திலும் இல்லை.