அல்-முக்தஸர்
أُو۟لَـٰٓئِكَ لَهُمْ جَنَّـٰتُ عَدْنٍ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَـٰرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۚ نِعْمَ ٱلثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا ﴿٣١﴾
ஈமான் மற்றும் நற்செயல் செய்து தங்களை அலங்கரித்தவர்களுக்கு சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றின் தங்குமிடங்களுக்குக் கீழே சுவையான நீரினையுடைய ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்க வலையல்களால் அலங்கரிக்கப்படுவார்கள். மெல்லிய, கனமான பச்சைநிற பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அழகிய விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்திருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி எத்துணை அழகானது! அவர்கள் தங்கியிருக்கும் சுவனம் எத்துணை அழகானது!