×
الكهفவசனம் 32

அல்-முக்தஸர்

وَٱضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَـٰبٍ وَحَفَفْنَـٰهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا ﴿٣٢﴾

தூதரே!- அவர்களுக்கு இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துக் கூறுவீராக: ஒருவர் நம்பிக்கையாளராகவும் மற்றொருவர் நிராகரிப்பாளராகவும் இருந்தார். நாம் நிராகரிப்பாளனுக்கு இரு திராட்சை தோட்டங்களை ஏற்படுத்தியிருந்தோம். இரு தோட்டங்களையும் சுற்றி பேரீச்சை மரங்கள் காணப்பட்டது. அவ்விரண்டிலும் காலியாக உள்ள பகுதிகளில் பயிர்களையும் முளைக்கச் செய்திருந்தோம்.