×
الكهفவசனம் 48

அல்-முக்தஸர்

وَعُرِضُوا۟ عَلَىٰ رَبِّكَ صَفًّا لَّقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَـٰكُمْ أَوَّلَ مَرَّةٍۭ ۚ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًا ﴿٤٨﴾

மனிதர்கள் விசாரணைக்காக உம் இறைவனுக்கு முன்னால் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “நாம் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே தனித்தனியாக செருப்புகளின்றி, நிர்வாணமாக விருத்தசேதனம் செய்யப்படாதோராக நம்மிடம் வந்துவிட்டீர்கள். மாறாக நாம் உங்களை மீண்டும் எழுப்ப மாட்டோம் என்றும் நாம் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக ஒரு இடத்தையும் காலத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்றும் நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.