×
الكهفவசனம் 49

அல்-முக்தஸர்

وَوُضِعَ ٱلْكِتَـٰبُ فَتَرَى ٱلْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَـٰوَيْلَتَنَا مَالِ هَـٰذَا ٱلْكِتَـٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّآ أَحْصَىٰهَا ۚ وَوَجَدُوا۟ مَا عَمِلُوا۟ حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ﴿٤٩﴾

அவர்களுக்கு முன்னால் செயல்பதிவேடு வைக்கப்படும். அவர்களில் சிலர் தம் வலது கையால் அதனை எடுப்பார்கள்; சிலர் தம் இடது கையால் அதனை எடுப்பார்கள். -மனிதனே!- நிராகரிப்பாளர்கள் தங்களைக்குறித்து அஞ்சியவர்களாக இருப்பதைக் காண்பாய். ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தி வைத்த நிராகரிப்பையும் பாவங்களையும் அறிந்துவைத்துள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே, சோதனையே! இந்த பதிவேட்டிற்கு என்னவாயிற்று? எங்களின் சிறிய, பெரிய செயல்கள் எதையும் இது பதிவுசெய்யாமல் விட்டுவைக்கவில்லையே!” அவர்கள் உலக வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் எழுதி பதியப்பட்டிருப்பதைக் காண்பார்கள். -தூதரே!- உம் இறைவன் யார்மீதும் அநீதி இழைக்க மாட்டான். பாவம் செய்யாமல் யாரையும் அவன் தண்டிக்க மாட்டான். அவன் தனக்குக் கட்டுப்பட்டவர்களின் கூலியை சிறிதும் குறைத்துவிட மாட்டான்.