×
الكهفவசனம் 79

அல்-முக்தஸர்

أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتْ لِمَسَـٰكِينَ يَعْمَلُونَ فِى ٱلْبَحْرِ فَأَرَدتُّ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا ﴿٧٩﴾

நான் துளையிட்டுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த கப்பலின் விவகாரம் என்னவென்றால், அது கடலில் வேலைசெய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. அவர்களால் அதனை பாதுகாக்க முடியாது. நான் அதிலே ஏதேனும் செய்து அதனைக் குறையுடைய கப்பலாக ஆக்க நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னால் குறையுடைய கப்பல்களை விட்டுவிட்டு நல்ல கப்பல்களை அவர்களிடம் இருந்து நிர்பந்தமாக அபகரித்துக் கொள்ளும் ஓர் அரசன் உள்ளான்.