அல்-முக்தஸர்
وَأَمَّا ٱلْغُلَـٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَآ أَن يُرْهِقَهُمَا طُغْيَـٰنًا وَكُفْرًا ﴿٨٠﴾
நான் கொன்றுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த சிறுவனின் விவகாரம் என்னவென்றால், அந்த சிறுவனின் தாய், தந்தையர் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். அவனோ பின்னாளில் நிராகரிப்பாளனாக வருவான் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தான். அவர்களுக்கு அவன் மீதுள்ள அதீத அன்பின் காரணமாகவோ, தேவையின் காரணமாகவோ அவர்களை அவன் நிராகரிப்பில் தள்ளிவிடுவானோ என்று நாம் அஞ்சினோம்.