×
مريمவசனம் 58

அல்-முக்தஸர்

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُ ٱلرَّحْمَـٰنِ خَرُّوا۟ سُجَّدًا وَبُكِيًّا ۩ ﴿٥٨﴾

ஸகரிய்யா முதல் இத்ரீஸ் வரை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் அனைவருக்கும் தூதுப்பணியை அளித்து அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிந்துள்ளான். அவர்கள் ஆதமின் சந்ததியிலும், நூஹுடன் நாம் கப்பலில் சுமந்து சென்றவர்களிலும், இப்ராஹீம் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்களிலும், நாம் இஸ்லாத்தின்பால் நேர்வழி அளித்தவர்களிலும் உள்ளவர்களாவர். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாக ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதைச் செவியுற்றால் அவன் மீதுள்ள பயத்தால் அழுதவர்களாக, அவனுக்குச் சிரம்பணிபவர்களாக இருந்தார்கள்.