×
مريمவசனம் 59

அல்-முக்தஸர்

فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ﴿٥٩﴾

தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தூதர்களுக்குப் பிறகு தீய வழிகேடர்கள் வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றவில்லை. விபச்சாரம் போன்ற தங்களின் மனம் ஆசை வைக்கும் பாவங்களில் ஈடுபட்டார்கள். விரைவில் அவர்கள் நரகத்தில் தீங்கினையும், ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள்.