×
مريمவசனம் 66

அல்-முக்தஸர்

وَيَقُولُ ٱلْإِنسَـٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا ﴿٦٦﴾

மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளன் பரிகாசமாகக் கூறுகிறான்: “நான் இறந்துவிட்டால் என் கப்ரிலிருந்து மீண்டும் இரண்டாவது தடவையாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவேனா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.”