×
مريمவசனம் 67

அல்-முக்தஸர்

أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَـٰنُ أَنَّا خَلَقْنَـٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا ﴿٦٧﴾

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவன், முன்னர் அவன் எதுவாகவும் இல்லாமல் இருந்த நிலையில் நாம் அவனைப் படைத்தோம் என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா? இரண்டாவதாகப் படைக்க முடியும் என்பதற்கு முதலில் படைத்ததை ஆதாரமாகக் கொள்ளமாட்டானா. நிச்சயமாக இரண்டாவதாகப் படைப்பது மிகவும் எளிதானது.