அல்-முக்தஸர்
أَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ ۗ وَمَن يَتَبَدَّلِ ٱلْكُفْرَ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١٠٨﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உங்கள் தூதரிடம் இதற்கு முன்னர் மூசாவின் சமூகம் கேட்டதுபோன்று ஆட்சேபிக்கும் தொனியில் கேள்வி கேட்காதீர்கள். “அவர்கள் தங்கள் தூதரிடம் ‘அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டு’ என்று கேட்டார்கள். (4:153) எவர் ஈமானை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார்.