×
البقرةவசனம் 109

அல்-முக்தஸர்

وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَـٰنِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ ۖ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٠٩﴾

வேதக்காரர்களில் பெரும்பாலோர் அவர்களுக்குள் இருக்கும் பொறாமையினால், நீங்கள் முன்னர் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததுபோன்று ஈமான் கொண்டபிறகும் நிராகரிப்பாளர்களாகி விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தத் தூதர் கொண்டு வந்தது அல்லாஹ்விடமிருந்துள்ள உண்மையாகும் என்பதை அறிந்தபிறகே அவர்கள் இவ்வாறு ஆசைகொள்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே, அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கும்வரை, அவர்களின் செற்பாடுகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் அறியாமை தீய எண்ணம் என்பவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவர்களால் அவனை வெல்லமுடியாது. அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது, எனவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஜிஸ்யாவை அளித்துவிட வேண்டும் அல்லது போரிட வேண்டும்.