×
البقرةவசனம் 115

அல்-முக்தஸர்

وَلِلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا۟ فَثَمَّ وَجْهُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٌ ﴿١١٥﴾

கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் தான் நாடியவற்றைக் கொண்டு அடியார்களை ஏவுகிறான். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வையே நோக்குகிறீர்கள். அவன் உங்களை பைத்துல் முகத்தஸை நோக்கும்படியோ கஅபாவை நோக்கும்படியோ ஏவினால், அல்லது நீங்கள் முன்னோக்கும் திசையில் தவறிறைத்தால் அல்லது அதனை முன்னோக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் அதனால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். தன் அருளாலும் இலகுபடுத்தலாலும் படைப்புகளுடன் விசாலத்தன்மையுடன் நடப்பவன். அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன்.