×
البقرةவசனம் 116

அல்-முக்தஸர்

وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًا ۗ سُبْحَـٰنَهُۥ ۖ بَل لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ كُلٌّ لَّهُۥ قَـٰنِتُونَ ﴿١١٦﴾

யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொண்டான் என்று.” இதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் படைப்புகளை விட்டும் தேவையற்றவன். தேவையுடையவர்கள்தாம் மகனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாறாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அவனது அடிமைகளே, அவனுக்குக் கட்டுப்பட்டவைகள்தாம். தான் நாடியவாறு அவற்றை நடத்துகிறான்.