×
البقرةவசனம் 150

அல்-முக்தஸர்

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿١٥٠﴾

தூதரே! நீர் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்வீராக. நம்பிக்கையாளர்களே! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தொழவிரும்பினால் அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது ஏனெனில், அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மக்களிடம் உங்களுக்கு எதிராக வாதம் புரிய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அநியாயக்காரர்கள் தங்களின் பிடிவாதத்தில்தான் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அபத்தமான ஆதாரங்களைக் கொண்டும் உங்களுக்கு எதிராக வாதாடுவார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள். உங்கள் இறைவன் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றிலிருந்து விலகி அவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்ற சமூகங்களிலிருந்து உங்களை வேறுபடுத்தி, உங்கள்மீது அவன் பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும், மனிதர்களுக்கான மிகச் மிகச் சிறந்த கிப்லாவை உங்களுக்கு காட்டித்தருவதற்காகவுமே கஅபாவை முன்னோக்குமாறு அவன் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.