×
البقرةவசனம் 151

அல்-முக்தஸர்

كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَـٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ ﴿١٥١﴾

அதுபோன்று இன்னுமொரு அருட்கொடையையும் நாம் உங்களுக்கு அளித்துள்ளோம். அது, உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். அவர் நம்முடைய வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்; நன்மையான விஷயங்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டி, தீமையான, இழிவான விஷயங்ளை விட்டும் உங்களைத் தடுத்து உங்களைத் தூய்மைப்படுத்துகின்றார்; குர்ஆனையும், சுன்னாவையும் உங்களுக்கு போதிக்கின்றார்; நீங்கள் அறியாத ஈருலக விஷயங்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.