×
البقرةவசனம் 184

அல்-முக்தஸர்

أَيَّامًا مَّعْدُودَٰتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ ۚ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿١٨٤﴾

வருடத்தில் சில நாட்களே உங்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ, பயணம் செய்யக்கூடியவராகவோ இருந்தால் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் விட்டவற்றை கணக்கிட்டு நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்க சக்திபெற்றவர் நோன்பு நோற்கவில்லையெனில் அதற்குரிய பரிகாரத்தை அளித்துவிடட்டும். அது நோன்பை விடுகின்ற ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்தலாகும். நீங்கள் நோன்பின் சிறப்புகளை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்காமல் பரிகாரம் வழங்குவதை விட நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இது அல்லாஹ் முதல் கட்டமாக நோன்பை விதியாக்கிய நேரத்தில் இருந்த சட்டமாகும். அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம், விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உணவளிக்கலாம். பின்னர் அல்லாஹ் வயதுவந்த சக்தியுள்ள அனைவரின்மீதும் நோன்பு நோற்பதை கடமையாக்கினான்.