×
البقرةவசனம் 185

அல்-முக்தஸர்

شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿١٨٥﴾

ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.