×
البقرةவசனம் 186

அல்-முக்தஸர்

وَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ ﴿١٨٦﴾

தூதரே! என் அடியார்கள் என்னை நெருங்குவது குறித்தும், நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது குறித்தும் உம்மிடம் வினவினால் - நான் அவர்களுக்குச் சமீபமாக, அவர்களின் நிலையை நன்கறிந்தவனாக, அவர்களின் பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றேன். அவர்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை; அவர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. அழைப்பவரின் அழைப்புக்கு, அவர் என்னை உளத்தூய்மையுடன் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படட்டும்; தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கட்டும். இதுதான் நான் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை. இதனால் அவர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் நேரான பாதையில் சென்றிடலாம்.