அல்-முக்தஸர்
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَٱلْـَٔـٰنَ بَـٰشِرُوهُنَّ وَٱبْتَغُوا۟ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ مِنَ ٱلْخَيْطِ ٱلْأَسْوَدِ مِنَ ٱلْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا۟ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيْلِ ۚ وَلَا تُبَـٰشِرُوهُنَّ وَأَنتُمْ عَـٰكِفُونَ فِى ٱلْمَسَـٰجِدِ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ ﴿١٨٧﴾
ஆரம்பத்தில் ஒருவர் நோன்பு இரவில் தூங்கி, ஃபஜ்ருக்கு முன் விழித்துவிட்டால் அவர் உண்ணவோ உடலுறவு கொள்ளவோ தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் அல்லாஹ் இந்த கட்டளையை ரத்துசெய்தான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நோன்பு இரவுகளில் உங்கள் மனைவியருடன் உறவுகொள்வதை உங்களுக்கு அல்லாஹ் அனுமதித்துவிட்டான். அவர்கள் உங்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒருவர் மற்றவரை விட்டும் தேவையற்றிருக்க முடியாது. அவன் உங்களுக்குத் தடுத்த செயலைக்கொண்டு உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள் என்பதை அவன் அறிந்துகொண்டான். உங்கள்மீது கருணைகாட்டி, உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திவிட்டான். எனவே நீங்கள் உறவுகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்த குழந்தைகளைத் தேடிக்கொள்ளுங்கள். அதிகாலை தெளிவாக வெளிப்படும்வரை இரவில் நீங்கள் உண்ணலாம், பருகலாம். பஜ்ர் உதித்ததிலிருந்து சூரியன் மறையும்வரை நோன்பை முறிக்கக்கூடிய விஷயங்களை விட்டும் தவிர்ந்து நோன்பை நிறைவுபடுத்துங்கள். நீங்கள் பள்ளிவாயில்களில் (இஃதிகாஃபில்) தங்கியிருக்கும்போது மனைவியிருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வது அதனை முறித்துவிடும். மேற்குறிப்பிட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் ஹலால், ஹராம் தொடர்பாக அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். எனவே அவற்றை ஒருபோதும் நெருங்கிவிடாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை நெருங்குபவர் தடைசெய்யப்பட்டவற்றில் விழுந்துவிட நேரிடலாம். மக்கள், அல்லாஹ் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இச்சட்டங்களை நன்கு தெளிவுபடுத்துவதன் மூலம் அவன் தன் வசனங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.