×
البقرةவசனம் 188

அல்-முக்தஸர்

وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿١٨٨﴾

திருட்டு, கொள்ளை, மோசடி போன்ற சட்டத்திற்குப் புறம்பான வழியில் நீங்கள் ஒருவர் மற்றவரின் செல்வத்தைப் பெறாதீர்கள். மக்களின் செல்வத்தை பாவமான முறையில் பிடுங்குவதற்காக அதிகாரிகளிடம் வாதாடாதீர்கள். இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தடைசெய்யப்பட்டது என அறிந்துகொண்டே பாவத்தில் ஈடுபடுவது மிகக் கேவலமானதும் பெரும் தண்டனைக்குரிய செயலுமாகும்.