×
البقرةவசனம் 203

அல்-முக்தஸர்

وَٱذْكُرُوا۟ ٱللَّهَ فِىٓ أَيَّامٍ مَّعْدُودَٰتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ ٱتَّقَىٰ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٠٣﴾

துல்ஹஜ் பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று ஆகிய நாட்களில் "அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்" ஆகிய திக்ருகளைக் கொண்டு அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் அவசரப்பட்டு பன்னிரண்டாவது நாளே கல்லெறிந்த பிறகு மினாவிலிருந்து வெளியேறிவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவரைவிட்டும் சட்டத்தை தளர்தியுள்ளான். எவர் பதிமூன்றாம் நாள்வரை தாமதித்துச் சென்றாரோ அவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அவர் பரிபூரணமானதைச் செய்துள்ளதோடு நபி (ஸல்) அவர்களது செயலையும் பின்பற்றியவராவார். இவையனைத்தும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் அல்லாஹ்வை அஞ்சி அவன் கட்டளையிட்டபடி நிறைவேற்றியவர்களுக்குத்தான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும், அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.