×
البقرةவசனம் 204

அல்-முக்தஸர்

وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ ﴿٢٠٤﴾

தூதரே! மனிதர்களில் சில நயவஞ்சகர்கள் உள்ளனர். இவ்வுலகில் அவர்களின் பேச்சு உம்மை ஈர்த்துவிடும். அவர்கள் பேசும் தொனியைப் பார்த்து "அவர்கள் உண்மையாளர்கள், விசுவாசமானவர்கள்" என்று நீர் எண்ணலாம். அவர்கள் இதன்மூலம் தங்களையும், தங்கள் செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களின் உள்ளத்தில் ஈமானும் நன்மையும் உள்ளதாகக்கூறி அல்லாஹ்வையே அதற்கு சாட்சியாக்குவார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு கடும் பகைவர்களாவர்.