அல்-முக்தஸர்
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۘ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ ﴿٢١٢﴾
அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையும் அதிலுள்ள அழியக்கூடிய இன்பங்களும் அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர்களை பரிகாசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இந்த நிராகரிப்பாளர்களைவிட மறுமையில் உயர்ந்தநிலையில் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை நிலையான சுவனங்களில் தங்கச் செய்வான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான்.