அல்-முக்தஸர்
كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿٢١٣﴾
மனிதர்கள் தங்களின் தந்தை ஆதமின் மார்க்கத்தில் ஒன்றுபட்டவர்களாக, ஒரு சமூகத்தினராக இருந்தார்கள். ஷைத்தான் அவர்களை வழிகெடுத்தான். அதனால் அல்லாஹ்வை நம்பியவர்கள், நிராகரித்தவர்கள் என பிரிந்துவிட்டனர். இதனால் அல்லாஹ் தூதர்களை நற்செய்தி கூறக்கூடியவர்களாகவும், எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பிவைத்தான். அவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் தயார்படுத்தியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள். அவனை நிராகரித்தவர்களுக்கு அவன் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார்கள். மக்களிடையே தோன்றும் கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்ப்பளிப்பதற்காக தூதர்களுடன் உறுதியான சத்தியத்தை உள்ளடக்கிய வேதங்களையும் இறக்கினான். தவ்ராத்தின் அறிவு வழங்கப்பட்டவர்களே அதில் முரண்பட்டனர். கருத்துவேறுபாடு கொள்ளமுடியாத அளவு அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மைதான் என்பதற்கு ஆதாரங்கள் வந்த பின்பும் யூதர்கள் அநியாயமாகவே தவ்ராத்தில் கருத்துவேறுபட்டார்கள். தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அல்லாஹ், நேர்வழியை அறிந்து அதனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளித்தான். அல்லாஹ் தான் நாடியோருக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியான ஈமானின் வழியைக் காட்டுகிறான்.