×
البقرةவசனம் 214

அல்-முக்தஸர்

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ ﴿٢١٤﴾

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் போன்று உங்களுக்கும் ஏற்படாமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா? வறுமையும் நோயும் அவர்களைப் பீடித்தது. அவர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்: அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று அவசரப்படும் அளவுக்கு அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்:அல்லாஹ்வையே நம்பியவர்களுக்கும் அவனையே சார்ந்திருப்பவர்களுக்கும் அவனுடைய உதவி சமீபத்தில் இருக்கிறது.