×
البقرةவசனம் 216

அல்-முக்தஸர்

كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٢١٦﴾

நம்பிக்கையாளர்களே! போரில் உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதால் மனதிற்கு வெறுப்பாக இருந்தபோதிலும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது போன்ற உங்களுக்குப் பயனுள்ள ஒரு விஷயத்தை நீங்கள் வெறுக்கலாம், அதற்குக் கிடைக்கும் அபரிமிதமான கூலிகளுடன் எதிரிகளை வென்றுவிடுதல், அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்தல் போன்ற நன்மைகளையும் அதில் நீங்கள் பெறலாம். போர் புரியாமல் இருப்பதைப் போன்ற உங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம். ஆனால் அதன் மூலம் இழிவும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்படும். நன்மைகளையும் தீங்குகளையும் அல்லாஹ்வே ஒவ்வொரு விடயத்தின் சாதக பாதகங்களை முழுமையாக அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே அவனது கட்டளைகளுக்கு அடிபணியுங்கள். அதில்தான் நன்மை அடங்கியுள்ளது.