×
البقرةவசனம் 217

அல்-முக்தஸர்

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّهِ ۚ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ ۗ وَلَا يَزَالُونَ يُقَـٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَـٰعُوا۟ ۚ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ ﴿٢١٧﴾

தூதரே! புனிதமான மாதங்களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர்புரிவதைப் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: இந்த மாதங்களில் போர்புரிவது அல்லாஹ்விடத்தில் பாவமானதும் கண்டனத்திற்குரியதுமாகும். அதே போன்று அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் இணைவைப்பாளர்களின் செயலும் கெட்டதாகும். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு நம்பிக்கையாளர்களைத் தடுப்பது, அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அல்லாஹ்விடத்தில் புனித மாதத்தில் போரிடுவதை விடப் பெரிய பாவமாகும். அல்லாஹ்விற்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் அவர்களின் செயற்பாடு கொலையைவிடக் கொடியது. நம்பிக்கையாளர்களே! வாய்ப்புக் கிடைத்தால் உங்களை உண்மையான மார்க்கத்திலிருந்து திருப்பி தமதுபொய்யான மார்க்கத்திற்கு கொண்டுவரும்வரை, அநீதியில் இருக்கும் இந்த இணைவைப்பாளர்கள் உங்களுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர் தம் மார்க்கத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நிராகரித்த நிலையில் மரணித்தும் விடுகிறாரோ அவரது நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மறுமையில் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்.