அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَـٰٓئِكَ يَرْجُونَ رَحْمَتَ ٱللَّهِ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢١٨﴾
அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், தங்களின் நாட்டை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கம் புலம்பெயர்ந்தவர்கள், அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிட்டவர்கள் ஆகிய இவர்கள்தாம் அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் விரும்புகிறார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளன்.