×
البقرةவசனம் 220

அல்-முக்தஸர்

فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۗ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَـٰمَىٰ ۖ قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۖ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٢٠﴾

இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடிய விஷயங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இவற்றை விதித்துள்ளான். தூதரே! உம்முடைய தோழர்கள் அநாதைகளை பொறுப்பேற்பது குறித்து, அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? உணவு, வசிப்பிடம் ஆகிய செவினங்களில் அவர்களின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிக்கலாமா? என்றெல்லாம் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு கலக்காமலும், அவற்றிலிருந்து இலாபத்தைப் பெறாமலும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பராமரிப்பது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததும் அதிகக் கூலியை பெற்றுத்தரக்கூடியதுமாகும். அதுவே அவர்களது செல்வத்துக்கும் சிறந்ததும் பாதுகாப்புமாகும். நீங்கள் அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிப்பதும் எவ்விதக் குற்றமுமில்லை. அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களாவர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். ஒருவர் மற்றவரின் விவகாரங்களில் பங்கெடுப்பார்கள். பொறுப்பாளிகளில் யார் அநாதைகளின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து அபகரிக்க நாடுபவர்கள், யார் அவற்றை முறையாக பராமரிக்க நாடுபவர்கள் என்பதையும் அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் அநாதைகளின் விவகாரத்தில் உங்களைச் சிரமத்தில் ஆழ்த்தியிருப்பான். ஆயினும் அவன் அவர்களுடன் நடந்துகொள்ளும் முறையை இலகுவாக்கித்தந்துள்ளான். ஏனெனில் மார்க்கம் இலகுவானது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது படைப்பு, திட்டமிடல், சட்டமியற்றல் ஆகியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.