அல்-முக்தஸர்
وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَـٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُو۟لَـٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ﴿٢٢١﴾
அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் பெண்களை -அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை - மணமுடிக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண் சிலைகளை வணங்கும் சுதந்திரமான பெண்ணைவிடச் சிறந்தவளாவாள், அவள் அழகாலும் செல்வத்தாலும் உங்களைக் கவர்ந்தபோதிலும் சரியே. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் ஆண்களுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட ஆண் அடிமை இணைவைக்கும் சுதந்திரமானவனை விடச் சிறந்தவனாவான், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. இந்த இணைவைக்கும் ஆண்களும் பெண்களும் தங்களின் சொல்லாலும் செயலாலும் நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் விஷயங்களின்பால் அழைக்கிறார்கள். அல்லாஹ், சுவனத்தில்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களின் பக்கமும், தனது அருளினால் பாவங்களை மன்னிப்பதன் பக்கமும் அழைக்கிறான். மக்கள் அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து படிப்பினை பெற்று அதன்படி செயல்படுவார்கள் என்பதற்காக அவன் அவர்களுக்கு தன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.