×
البقرةவசனம் 229

அல்-முக்தஸர்

ٱلطَّلَـٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَـٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ ﴿٢٢٩﴾

கணவன் விவாகரத்து அளித்த பின்னர் காத்திருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீட்டிக்கொள்வதற்கான அனுமதி இருமுறை மாத்திரம்தான். இரண்டாவது விவாகரத்தின் பின்னர் நல்லமுறையில் சேர்ந்து வாழவேண்டும். அல்லது அழகிய முறையில் மனைவியின் உரிமைகளை வழங்கி மூன்றாவது முறையும் விவாகரத்து அளித்துவிட வேண்டும். கணவர்களே! நீங்கள் அவர்களுக்கு அளித்த மணக்கொடையில்(மஹர்) எதையும் திரும்பப் பெறுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் மனைவிக்கு கணவனின் தோற்றமோ குணமோ வெறுப்பை அளித்தாலே தவிர. இந்த வெறுப்பின் காரணமாக இருவரும் தங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றமுடியாது என எண்ணினால் அவர்களின் விஷயங்களை நெருங்கிய உறவினரிடமோ அல்லது மற்றவர்களிடமோ எடுத்துச் செல்லட்டும். அவர்கள் இருவரும் தங்களின் மணவாழ்வை ஒழுங்காக நடத்தமுடியாது என்று பொறுப்பாளர்கள் கருதினால் பெண் தன் கணவனுக்கு வழங்கும் செல்வத்தின் மூலம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. இச்சட்டங்கள் அனுமதிக்கப்பட்டவைக்கும் தடுக்கப்பட்டதற்கும் இடையிலுள்ள வரம்புகளாகும். இவற்றை மீறிவிடாதீர்கள். யார் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வரம்புகளை மீறிவிடுகிறார்களோ அவர்கள்தாம் தங்களுக்குத் தாங்களே அழிவையும் அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் தேடிக்கொண்ட அநியாயக்காரர்கள்.