×
البقرةவசனம் 230

அல்-முக்தஸர்

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٢٣٠﴾

கணவன் மூன்றாவது முறையும் விவாகரத்து செய்துவிட்டால் அவள் வேறொருவரை முறையாகத் திருமணம் செய்து அவருடன் உறவுகொண்ட பின்னர் அவரால் விவாகரத்து செய்யப்படும்வரை அல்லது அவர் இறந்துவிடும்வரை முந்தைய கணவனுக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இரண்டாவது கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் முதல் கணவனும் அவளும் மீண்டும் சேர்ந்துவாழ்ந்து அல்லாஹ்வின் சட்டங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பினால் மீண்டும் புதிதாக ஒப்பந்தம் செய்து மணக்கொடையும் வழங்கி திருமணம் செய்துகொள்வதில் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் சட்டங்களை, வரம்புகளை அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு அவன் தன் சட்டங்களைத் தெளிவுபடுத்துகிறான். ஏனெனில் அவர்களே அதன் மூலம் பயன்பெறுவர்.