×
البقرةவசனம் 231

அல்-முக்தஸர்

وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَـٰتِ ٱللَّهِ هُزُوًا ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَـٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿٢٣١﴾

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் இத்தா தவணையை அவர்கள் நெருங்கிவிட்டால் நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம் அல்லது அவர்களின் தவணை முடியும்வரை அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளாமல் நல்லமுறையில் அவர்களை விட்டுவிடலாம். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்ததுபோல வரம்புமீறி அவர்களுக்குத் தீங்கிழைப்பதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளாதீர்கள். யார் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்வாரோ அவர் பாவத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றில் மகத்தானது அவன் உங்கள்மீது இறக்கிய குர்ஆனும் சுன்னாவும்தான். உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும் அச்சமூட்டுவதற்காகவும் இவற்றை அவன் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.